வாழ்வின் ஏமாற்றங்களும், அவற்றினால் உண்டான பரிமாற்றங்களும்...
என்னையே நான் புரிந்து கொல்ல கஷ்டபடுகிரேன்.. ஆனால் மற்றவர்களை பற்றி கவலை பட மட்டும் முயல்கிறேன்.. ஒருவன் எத்தனை நாட்கள் தான் குழம்பி கொண்டே இருப்பது என்று கேட்டால் அடுத்து ஒரு குழப்பத்திர்க்கு ஆலாகும் வரை என்கிறது நமது வாழ்வதாரம் சார்ந்த விசயங்கள்...
Thursday, August 19, 2010
Wednesday, August 18, 2010
சிறுபிள்ளையின் சிற்ப களஞ்சியம்
சிறுபிள்ளையின் சிற்ப களஞ்சியம்
ஒரு சிறு குழந்தை இந்த உலகத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பு, ஆசை, கனவு, லட்சியம், காதல், கவலை, சந்தோஷம், சொந்தம், நட்பு, பசி, என்று எதைப்பற்றிய அறிவும் இல்லாமல் தனது தாயின் கருவறையிலிருந்து ஒரு வெள்ளை தாளாக பிறக்கிறதோ அதை போலத்தான் நானும் இந்த உலகத்தில் எனது தாயின் கருவறையிலிருந்து இந்த உலகத்தில் எதை பற்றிய அறிவுமின்றி பிற்ந்தேன். எனது குடும்பத்தில் முதல் குழந்தை என்பதாலோ என்னவோ என் சொந்தகாரர்களின் அறவனைப்பு எனக்கு நன்றாகவே கிடைத்தது. பின்பு எனக்கு பின்னால் ஒரு அழகான தம்பி, பாசமான தங்கை என்று இருவர் பிறந்தனர்.
எனது தந்தை (மணி செல்வம்) ஒரு லாரி டிரைவராக இருந்து பின்பு ஒரு லாரிக்கு சொந்தக்காரர் ஆனார். எனது தந்தையுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர். ஒரு அக்கா (ராஜேஷ்வரி), மூன்று தங்கை (சந்திரா, சாந்தி, சித்ரா). ஒரு அன்பு தம்பி (வெங்கடேஷ்). எனது தாத்தா அரசு பேருந்தில் ஓட்டுனர் (ராஜ் நாயுடு), எனது பாட்டி (செல்லம்மாள்) பெயருக்கேற்ற செல்லம் எல்லோரிடமும்.
எனது அம்மா (சற்குணா) எங்களுக்காகவே வாழ்பவள். எனது அம்மாவிற்கு அம்மா கிடையாது. சிறு வயதிலேயே அவளை விட்டு போய்விட்டாள். ஆனால் அவளுக்கு ஒரு சின்னம்மா இருந்தாள். அதை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நினைக்கிறேன். எல்லருக்கும் தெரிந்ததுதான். என் அம்மாவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஒரு அக்கா (ரேனுகா), சின்னம்மாவுக்கு பிறந்தவர்கள்.. ஒரு தம்பி (செல்வம்), ஒரு தங்கை (சாந்தி) பெயருக்கு ஏற்றார் போல் எங்களிடம் இருந்து சாந்தமாகி விட்டள். பாவி நான் என்னை பெற்றவளை விட இவளைத்தான் அதிகமாக ‘அம்மா’ என்று அழைத்திருப்பேன். எனது தாத்தா (பெருமாள் நாயுடு), எனது அம்மவின் அம்மா (சாவித்திரி) தாத்தாவின் மனைவி (காமாட்சி).
பள்ளி வாழ்க்கை ;
எனது வீட்டினருகே டி.ஸ்.பி. மெட்ரிகுலேஷன் ஸ்கூல் என்னும் ஒரு பள்ளியில் தான் நான் எனது பள்ளி வாழ்க்கையை ஆரம்பித்தேன். எப்படி எவர்கள் எல்லாம் எனக்கு பழக்கமானார்கள் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் அவர்களை எனக்கு நன்றாகவே நினைவிருக்கிறது.
வினோத் ;
என் வீட்டு சுவற்றை உடைத்தால் அவன் வீடு. அது என்னவோ தெரியவில்லை எனக்கும் அவனுக்கும் இன்று வரையிலும் எந்த ஒரு சிறிய சண்டை கூட வந்த மாதிரி எனக்கு நினைவில்லை. ஆனால் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது, அவன் வீட்டிற்கு ஒரே பையன் அதனால் அவன் வீட்டில் அவனுக்கு அவ்வளவு பாசம் அவனுடைய அப்பா(பெரியசாமி) அரசு சொசைட்டியில் வேலை செய்து வந்தார். அது மட்டுமில்லாமல் பியர்லெஸ் என்னும் ஒரு நிறுவனத்திலும் பகுதி நேரமாக பணியாற்றினார். மிகவும் அழகான குடும்பம். என்ன நடந்ததென்றே தெரியவில்லை. திடீரென்று அவனுடைய அப்பாவிற்கு வேலை போய்விட்டது. அது மட்டும் போதாதென்று பியர்லெஸ் நிறுவனமும் திவாலனது.